புதுடெல்லி:

இந்தியாவின் புள்ளிவிவர தரவுகளிலும் அரசியல் குறுக்கீடு இருப்பதாகவும், புள்ளியியல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் 108 பொருளாதார நிபுணர்களும், சமூகவியலாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


இது குறித்து அவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், “உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி எண்ணிக்கையில் மாற்றம் செய்துள்ளது.
என்எஸ்எஸ்ஓ எனப்படும் தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் வேலையில்லா திண்டாட்டம் குறித்த தரவுகளையும் மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.

பொருளாதார மற்றும் சமூக அளவுகோலாக இருக்கும் இத்தகைய புள்ளிவிவரங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு பெரிதும் மதிக்கப்பட்டன.
இந்த புள்ளிவிவரங்களின் மதிப்பீடு குறித்தே விமர்சிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மதிப்பீட்டையே தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் அளவுக்கு எப்போதும் அரசியல் குறுக்கீடு இருந்ததில்லை.

புள்ளியியல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவேண்டும். புள்ளிவிவர அமைப்புகளின் கவுரவம் காப்பாற்றப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.