சென்னை:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து, கொரோனா தடுப்பு பணியில் பணிபுரிந்து வரும் வெளி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர்.
சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வைரஸ் பரவலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள்,மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், காவல்துறையினர் அனைவரும் தொடர்ந்து பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இதில் நோயாளிகளை பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்து வருவதில் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பணி சிறப்பானதாகும்.
இந்த நிலையில், சென்னையில் ஆம்புலன்ஸ் தேவையை கருத்தில்கொண்டு வெளி மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பெரியமேடு பகுதியில் தங்கி உள்ளனர்.
பொதுவாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 21 நாட்கள் மட்டும் பணிசெய்தால் போதும், 6 நாட்கள் விடுமுறை வழங்கப்படம். ஆனால், அவர்களுக்கு ஓய்வு கொடுக்காமலும், உணவு மற்றும் முறையான ஊதியம் ஓய்வு வழங்கப்படாமலும் அலைக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, தங்களை, சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பெரியமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் மேலாளரகள் மூன்று தினங்களில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் , என கூறி தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி உள்ளனர்.