malai

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது.  இந்த சமயத்தில்  குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, பெருமழை, வெள்ளம், புயல்  என பலவித இயற்கை பாதிப்புகள் ஏற்படும். பெரும் பொருட்சேதகம் மட்டுமின்றி உயிர்ச்சேதமும் ஏற்படும்.

இது போன்ற சூழ்நிலையில், உடனடியாக மக்களுக்கு உதவி செய்ய  24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் இயங்குகிறது. இந்த மையத்தை 1070 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  மேலும் 1913 என்ற மாநகராட்சி எண்ணையும்  தொடர்புகொண்டு உதவிகள் பெறலாம்.

தவிர அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு மையம் செயல்படும்.  இதை 1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். எந்த மாவட்டத்தில் இருந்து பேசினாலும், அந்த மாவட்டத்தின் கட்டுப்பாட்டு அறையின் இணைப்பு கிடைக்கும்.  எனவே எந்த இடத்தில் என்ன பிரச்சினை என்பதை 1077-ல் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்படும்..

ஆகவே,, மரம் விழுந்து கிடப்பது. மழை வெள்ளநீர்த் தேக்கம், மின்சார வயர் அறுந்து விழுதல், கட்டிட சேதம் போன்றவை குறித்து இந்த எண்ணுக்கு தெரிவியுங்கள்.

இந்த எண்களை உங்கள்  உறவினர், நண்பர்களுக்கும் அளியுங்கள்.