புது டெல்லி:
மத்திய ஆயுதப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படையில் (ITBP) சுமார் 6000 பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஜனவரி மாதம் உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றக் குழுவிடம் கூறியிருந்தது.
2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற போது அப்போது இருந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2014 அக்டோபர் 23ஆம் தேதி, சீன எல்லைப் பகுதியில் 54 புதிய எல்லை சாவடிகள் அமைக்க மேலிடத்திலிருந்து அனுமதி பெற்றுவிட்டதாக அறிவித்திருந்தார். மேலும் அவர் புதிய எல்லை சாவடிக்கு 12 படைப்பிரிவு தேவை என்றும், ஏறத்தாழ 12,000 பணியாளர்கள் வேண்டும் என்றும் கூறியிருந்தார். மீண்டும் 2017 ஆம் ஆண்டு ராஜ்நாத் சிங் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் 50 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்திருந்தார்.
அருணாச்சல பிரதேசத்திற்கு 54 புதிய எல்லை சாவடிகள் வரவிருப்பதாக ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த வருடம் அக்டோபர் 23ஆம் தேதி மாநில உள்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி 2014 ஆம் ஆண்டு முதல் சீன எல்லையையொட்டி 23 எல்லை சாவடிகள் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்ததாக கூறியிருந்தார்.
ஆதிக்க எல்லைக்கோட்டை ஒட்டியுள்ள, அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், லடாக் போன்ற பகுதிகளுக்கு சீனாவும் உரிமை கொண்டாடுகிறது. 1962 ஆம் ஆண்டு நடந்த இந்திய சீனப் போரில் நான்கு படைப்பிரிவினர்களை மட்டுமே கொண்டிருந்த இந்தியா தற்போது 60 படைப்பிரிவுகளை கொண்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இருந்து 180 எல்லை சாவடிகள் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லை சாவடிகள் 18,900 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 3-ஆம் தேதி பாராளுமன்ற குழு மாநிலங்களவையில் சமர்ப்பித்த அறிக்கையின் படி, இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படையில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 89,567. ஜனவரி 1-ஆம் தேதி சமர்ப்பித்த அறிக்கையின் படி இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படையில் 83 ஆயிரத்து 337 பேர் இருந்தனர்.
ஒட்டுமொத்த கணக்கின்படி 1,03,367, அதாவது 11% காலிப்பணியிடங்கள் மத்திய ஆயுத போலீஸ் படை(CAPF) எல்லை பாதுகாப்பு படை(BSF) ஷாஸ்திர சீமா பல்(SSB)மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைகளில்(CISF) உள்ளன.
இந்தோ திபெத்திய எல்லை காவல் படையில் 6,230 அதாவது 7% காலிப்பணியிடங்கள் உள்ளன. செய்தியாளர் சந்திப்பில், இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ். தேஜ்பால் கூறுகையில்: கடந்த 9 மாதங்களில் 842 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன, மேலும் 7,535 பணியாளர்கள் ஏ, பி, சி போன்ற பிரிவுகளில் நியமிக்கப்பட்டனர், என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் எங்களுடைய படை விரிவாக்க படவில்லை, ஓய்வு பெற்றவர்கள், தன்னார்வ ஓய்வு பெற்றவர்கள், மேலும் இறந்தவர்களின் இடத்தை நிரப்ப மட்டுமே ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார்.