கொப்ப:ள்

ர்நாடக நீதிமன்றம் தலித்துகளுக்கு எதிராக நடந்த வன்முறை குறித்த வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவின் கொப்பள் மாவட்டத்தில் உள்ள மரகும்பி கிராமத்தில் முடிவெட்டும் கடைகள், உணவகங்களுக்கு தலித் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே தலித் மக்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது..

மோதலை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் தலித் மக்களுக்கு சொந்தமான இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதை எதிர்த்து கர்நாடகா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் வெடித்தது.  காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வன்முறையில் ஈடுபட்டதாக 117-பேரை கைது செய்தனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கு கொப்பள் மாவட்டநீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததையடுத்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய 101 பேரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து நேற்று குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை கேட்டு குற்றவாளிகளின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் முதல் முறையாம ஒரே வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.