சென்னை: ஸ்டாலின் தலைமையிலான 100 நாட் ஆட்சி மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ததும், கருணாநிதி அண்ணா சமாதியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக சட்டப்பேரவையில் முதன்முதலாக இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் காகிதமில்லா வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட், மத்தியஅரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு காணிக்கை என்று, கூறிய அமைச்சர் தொடர்ந்து, பட்ஜெட் குறித்து பேசினார். அப்போது, தமிழக அரசு தயாரித்துள்ள வேளாண் பட்ஜெட், உழவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் நோக்கத்தோடு வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், உலகளாவிய வேளாண் வல்லுநர்களின் கருத்துகளை கேட்டும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். மேலும், வேளாண் தொகுப்புத் திட்டம், இளைஞர்களை வேளாண் தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 16 அம்சங்களுடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் 100 நாள் சாதனை குறித்து உரையாற்றினார். அதையடுத்து சபை 16ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா சமாதியில் மலர்தூவி மரியா செலுத்தினர்.