அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘டெத் வேலே’ (Death Valley) எனும் பாலைவன பள்ளத்தாக்கில் 1000 ம் ஆண்டுகளில் இல்லாத மழை பெய்துள்ளது.

உலகின் உஷ்ணமான பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் ‘டெத் வேலே’யில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை மழைபெய்துள்ளது.

இந்த பாலைவன பகுதியில் ஓராண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை கடந்த வெள்ளிக் கிழமை அன்று மூன்று மணி நேரத்தில் பெய்துள்ளது.

இதனால் அங்கு சாலைகள் குண்டும் குழியுமாக ஆனதுடன் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது.