புனே,
புனேயில் சாலையோரம் குப்பையினுடே  கிடந்த பையில் 1000 ரூபாய் நோட்டுகள் கிடந்தது. குபையை கிளீன் செய்த மாநகர தொழிலாளி அதை காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
பணம் பந்திலே குணம் குப்பையிலே என்று சீர்காழி கோவிந்தராஜனின் இனிமையான இசையில் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின்  அறிவிப்பால் ரூ.500, ரூ.1000 நோட்டுகள், வெற்று காகிதங்களாக  குப்பை தொட்டிக்கு வந்துவிட்டது.
மராட்டிய மாநிலம் புனேவில் குப்பை கூட்டும் மாநகராட்சி தொழிலாளி பெண் தொழிலாளி சாந்தா ஓஹல் என்பவர் ஒருவர் சாலையோரம் குப்பை கூட்டும்போது, ரோட்டோரம் பிளாஸ்டிக் கவர் ஏதோ பொருட்களுடன் கிடப்பதை கண்டார். அதை எடுத்து பிரித்து பார்த்தார்… அவருக்கு அதிர்ச்சி…. பிளாஸ்டிக் கவர் முழுவதும் புத்தம் புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள்….

ஆ… வென்று செய்வதறியாது திகைத்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு கிடைத்திருந்தால்…  பணத்தின் நிலைமையே வேறு… அவரின் நிலைமையும் வேறு… ஆனால், தற்போது அந்த 1000 ரூபாய் வெற்று காகிதமாக மாறிவிட்டது.
இதைபார்த்த அந்த பெண் தொழிலாளி, தனது மேலதிகாரிக்கு தகவல் கொடுத்தார். அதைதொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த கவரையும், பணத்தையும் கைப்பற்றினர்.
போலீசார் பணத்தை எண்ணிப்பார்த்தபோது, மொத்தம்  மொத்தம் ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள 1,000 ரூபாய் நோட்டுகள் அந்த பையில் இருந்தது தெரிய வந்தது.
இதுபற்றி மேற்கொண்டு விசாரணை செய்யப்படும்  புனே டெக்கான் ஜிம்கானா போலீஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.