புதுடெல்லி:
பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் இன்று முதல் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவுப் படி, ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இரு எண்களை இணைப்பதற்கு நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என வருமான வரி துறை அறிவித்திருந்த நிலையில், இந்த இணைப்புக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆதார்-பான் இணைக்காவிடில் ஜூலை 1 முதல் இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்து இருந்தது

இதன்படி, பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் இன்று முதல் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

மேலும், பான், ஆதார் எண்களை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது.