சென்னை: போக்குவரத்து துறையில் 1000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தென்மண்டல லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர்.
லாரி உள்பட கனரக வாகனங்களில், ஜிபிஎஸ், வேக்கட்டுப்பாட்டு கருவி களை குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்க வேண்டும் என்று வலியுறுத்திம், ஒளிரும் பட்டை ஒட்டுவது குறித்தும் போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதில் ஓரு குறிப்பிட்ட நிறுவனத்தில் கருவிகளை வாங்க அரசு அறிவுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் டிச.27 முதல் லாரிகள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
முன்னதாக, வேகக் கட்டுப்பாட்டு கருவியை குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்குமாறு தமிழக அரசு வற்புறுத்தலை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், எந்த நிறுவனத்திலும் கட்டுப்பாட்டுக் கருவியை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும் அரசின் உத்தரவுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு, ஜிபிஎஸ்வேகக்கட்டுப்பாட்டுக் கருவி கட்டாயம் பொருத்துவது போன்ற அறிவுறுத்தல்கள் மற்ற மாநிலங்களில்இல்லை என்று தெரிவித்ததுடன், காலாண்டு வரியைச் செலுத்துமாறும் கட்டாயப்படுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27ஆம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம். இன்றிலிருந்து 21 நாள் கெடு உள்ளது. அதற்குள் மாநில அரசு எங்களது கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாற அவர்கள் கூறியுள்ளனர்.