தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் 1000ஐ கடந்தது

Must read

சென்னை: தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 3,49,654 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று மட்டும் 121 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6007 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5850 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை 2,89,787 பேர் வீடு திரும்பியுள்ளனர். தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக 1,182 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் சென்னையில் இதுவரை 1,19,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று, 1,097 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சென்னையை தவிர்த்து திருவள்ளூரில் 489 பேருக்கும், செங்கல்பட்டில் 400 பேருக்கும், கோவையில் 392 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.  கடலூரில் 250 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 249 பேருக்கும், சேலத்தில் 286 பேருக்கும், தேனியில் 295 பேருக்கும், கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1000ஐ கடந்து உள்ளது.

More articles

Latest article