சென்னை: பொதுமக்களின் புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்க  மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட 60 பேர் கொண்ட  தரக்கட்டுப்பாட்டு குழு முறைகேட்டில் ஈடு பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து,  அந்த  அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ஜே. குமரகுருபரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிதாக அமைக்கப்பட்ட 60 பேர் கொண்ட தரக்கட்டுப்பாட்டு குழு தனது முதல் நாள் பணியில் சென்னை மாநகராட்சிக்கு அளிக்கப்பட்ட 1000 புகார்களில் 180 புகார்கள் நிவர்த்தி செய்யப்படாமல் மூடப்பட்டுவிட்டதாகக் கண்டறிந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   அதிகாரிகளின் மெத்தனத்தாலும், ஊழல்களாலும் பொதுமக்களின் புகார்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து  ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்  குமரகுருபரன் மூடப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட புகார்களை  கண்டறிந்து, அதுதொடர்பாக மனு கொடுத்த மக்களை அழைத்து விசாரித்தபோது,  ​​அவர்கள் எழுப்பிய பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை எனபது தெரிய வந்தது. இதனால் கோபம் அடைந்த ஆணையர், தர கட்டுப்பாட்டு குழு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துதார்.  மேலும், இதுபோன்ற செயல்கள் நீடித்து, அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

பொதுமக்கள் ஆன்லைன் மூலம் தங்களது புகார்களை தெரிவித்து, அதனை சரி செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில்  சென்னை மாநகராட்சி  நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள், சென்னை மாநகராட்சியின்  ஹெல்ப் லைன் 193, மற்றும் ஆப், 1 மற்றும், சமூக ஊடக தளமான எக்ஸ் மற்றும் ஜிசிசியின் ஆன்லைன் இணையதளம் மூலம் புகார்கள் அளிக்கலாம் என அறிவித்திருந்தது.

இந்த புகார்கள்மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து துறைகளைச் சேர்ந்த 60 அதிகாரிகள் கொண்ட குழுவையும் அமைத்து உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து புகார்கள்மீதான நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில்,   பல்வேறு போர்ட்டல்களில் ஒரே நேரத்தில் செய்யப்படும் புகார்களின் நிலையை நேரலையில் கண்காணிக்க GCC அதிகாரப்பூர்வ செயலியும் தொடங்கப்பட்டது.

அதன்படி,  சென்னை மக்கள் ஏராளமான புகார்களை சென்னை மாநகராட்சியின் இணையதளம் மற்றும் ஆப் மற்றும் ஹெலப் லைன் எண்கள் மூலம் பதிவு செய்தனர்.  சாலை பிரச்சினை, மின்சார பிரச்சினை, கழிவுநீர் பிரச்சினை, மழைநீர் வடிகால் பிரச்சினை, மின்சாரப் பிரச்சினை, குப்பை அள்ளுவது தொடர்பாக என  ஆயிரக்கணக்கான புகார்களை பதிவு செய்தனர்.

இந்த   அனைத்துப் புகார்கள் குறித்து,   சென்னை கார்ப்பரேஷனில் புதிதாக உருவாக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டுக் குழு,  ஆய்வுகளை மேற்கொண்டது,  முதல்நாளில் சுமார் 100 புகார்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டது.  இந்த  1,000 புகார்களில் 180 தீர்வுகள் இல்லாமல் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் பல புகார்கள் வந்துள்ளன.

இந்த விவரங்களை ஆய்வு செய்த ஜிசிசி கமிஷனர் ஜே.குமரகுருபரன் அதிர்ச்சி அடைந்தார்.  புகார்களை நிவர்த்தி செய்யாமல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய நேரிடும் என்று எச்சரித்தார். மேலும், பொதுமக்களின் புகார்கள் குறித்து,  பிராந்திய துணை கமிஷனர்கள் மற்றும் மண்டல அதிகாரிகளுக்கு புகார்களை மூடுவதற்கு முன் மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தினார்.  இந்த புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆன்லைன்  செயலிமூலம் கண்டறியப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மாநகராட்சி ஆணையர்  குமரகுருபரன்,  சென்னை மாநகராட்சி பொதுமக்களின் புகார்கள்மீது உடனே நடவடிக்கை எடுக்க 60 பேர் கொண்ட குழுவை அமைத்து்ளளது. இைத  மக்களுக்கு  விளம்பரப்படுத்த வேண்டும் என்றவர், மாநகராட்சி  அமைத்துள்ள குழுவினர், பொதுமக்களின் புகார்கள் குறித்து, அவர்களிடம் கேட்டறிந்து, குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றவர்,  குழு இதை தினமும் இதை செய்யும்,” என்றார்.

மேலும்,  மழை நீர் வடிகால் தேவை அல்லது சாலைகளை சரிசெய்வது தொடர்பான சில புகார்கள் கவனிக்க கடினமாக இருப்பதாக சில அதிகாரிகள் தெரிவித்ததாக கூறிய ஆைணயர், . “ஒரு முன்மொழிவு நிலை, மண்டல ஒப்புதல்கள், கவுன்சில் ஒப்புதல்கள் மற்றும் டெண்டர் செயல்முறை உள்ளது. இதற்கு மாதங்கள் ஆகலாம். இதுபோன்ற பெரிய புகார்களை தீர்ப்பது கடினம். நாங்கள் சிக்கலை அதிகாரிகளுக்கு அனுப்பி தேவையான நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறோம் என்றார்.

குமரகுருபரன் மேலும், கூறுகையில், GCC பெரிய பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் மீதான புகார்களை வெளிப்படையாக வைத்திருக்கும். “அத்தகைய புகார்களை நாங்கள் மூட முடியாது.  நாங்கள் அவற்றைத் திறந்து வைப்போம் மற்றும் முன்மொழிவுகள் மற்றும் திட்டச் செயலாக்கம் குறித்த சரியான நேரத்தில் புதுப்பிப்புகளை வழங்குவோம், தெரு விளக்கு புகார்களை கூட பல்புகள் அல்லது வயரிங் மாற்றுவதன் மூலம் உடனடியாக மூடலாம் ஆனால் சிவில் புகார்களுக்கு கால அவகாசம் தேவை என்றும் கூறினார்.