சென்னை:
மார்ச் 1ந்தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும். மார்ச் 31ந்தேதிக்குள் 100 சதவிகிதம் ஸ்மார்ட் கார்டு உபயோகத்துக்கு கொண்டு வரப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில், உணவுப் பொருள் வழங்கல் மண்டல முதுநிலை மேலாளர், மேலாளர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், இதுவரை 99% ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதாவது இதுவரை தமிழகத்தில் ஒரு கோடியே 93லட்சத்து 58ஆயிரத்து 47 ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 8 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்க வேண்டியது இருப்பதாகவும் கூறினார்.
மேலும்,விடுபட்டுள்ள அனைவருக்கும் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டு, அனைத்து ஸ்மார்ட் அட்டைகளும் மார்ச் 31ம் தேதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை உணவுப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களில் 1037பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.