டெல்லி:
நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 100 கோடிக்கு ரூ.100 நோட்டுகளை வழங்க ரிசர்வ் வழங்கி முடிவு செய்துள்ளது.
கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளியில் கொண்டுவருவதற்காக கடந்த நவம்பர் 8ம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனால் நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு திடீரென பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. தங்களுக்கு ரூபாய் நோட்டுகள் தேவை என நேபாளம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்தது. இந்தியாவில் நிலைமை சகஜமான பின்னர் ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைப்பதாக ரிசர்வ் வங்கி உறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் 100 கோடி ரூ.100 நோட்டுகளை அனுப்பி வைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக நேபாள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதத்துக்குள் இந்த பணம் தங்களுக்கு கிடைக்கும் என நோளர் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.