திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி! தமிழகஅரசு

Must read

சென்னை: திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக  தமிழகஅரசு அறிவித்துள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக   கடந்த மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டதால்,  திரையுலகம் வரலாறு காணாத இழப்பை எதிர்கொண்டது. படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைத்துறை தொழிலாளர்கள் அனைவரும்  பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர்.
இதையடுத்து, கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் காரணமாக, கடந்த ஆண்டு (2019) அக்டோபர் மாதம் பல்வேறு கட்டுப்பாடுகள், மற்றும் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவாதத்துடன்,   தியேட்டர்களை திறக்க  திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
ஆனால், கேளிக்கை விடுதிகள், சுற்றுலாத்தலங்ககளுக்கு 100 சதவிகித தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால்,  தியேட்டர்களிலும் 100 சதவிகித இருக்கைகளை உபயோகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என  திரையரங்கு உரிமையாளர்கள், அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடியை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். நடிகர் சிம்புவும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இநத் நிலையில்,  திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்கள் அனுமதி தமிழக தலைமைச்செயலாளர் கே.சண்முகம் உத்தரவு பிறப்பித்து உள்ளார். தமிழகத்தில், கொரோனாதொற்று பரவல் 900க்கும் கீழே குறைந்துள்ள நிலையில்,  திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்கலாம் என தெரிவித்து உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு விஜயின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகள் முழு அளவில் திறக்கப்படுகின்றன. இதனால் அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More articles

Latest article