சேலம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டங்களிலும் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் இன்று மேலும் 100 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1100ஐ தாண்டி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று (2ந்தேதி) மாலை நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோர் மொத்த எண்ணிக்கை 1034 ஆக இருந்தது. இவர்களில் 288 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 743 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 3 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1134 ஆக உயர்ந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel