சென்னை: அரசு மருத்துவமனைகளில் 100% சுக‌ப்பிரசவம் நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இன்று சென்னை தாய் சேய் நல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை திறந்துவைத்தார். தொடர்ந்து, அவசரகால ஊர்தி சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மகப்பேறு மருத்துவ சேவையில் சிறந்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. சிறந்த மருத்துவ சேவையை அரசு மருத்துவமனை வழங்கி வருகிறது. ‘அறுவை சிகிச்சையை குறைத்து, சுகப்பிரசவம் அதிகரிக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றவர், அறுவை சிகிச்சை வாயிலாக குழந்தை பிறப்பை தடுப்பதற்கு, ஒன்றரை ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டை விட பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெகுவாக இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அரசு மகப்பேறு சேவையில் அறுவை சிகிச்சை சதவீதம் கடந்தாண்டு 43 சதவீதமாக இருந்தது. அது தற்போதைய ஆண்டு 38 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த 5 சதவீதம் என்பது ஏற்றுகொள்ள கூடியது இல்லை என்றாலும் நல்ல முன்னேற்றம் தான்.

மகப்பேறு சிகிச்சையில் அறுவை சிகிச்சை இல்லாமல் 100 சதவீதம் சுக பிரசவம் என்பதே மகப்பேறு பிரிவின் நோக்கமாகும். சில தாய்மார்கள் ஏதேனும் குறிப்பிட்ட தேதிகளில். யாருடைய பிறப்பு இறப்பு தினம், வேறு ஏதேனும் குறிப்பிட்ட தினதத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

அந்த எண்ணம் மாற வேண்டும். அதனால் குழந்தைக்க்கு நல்லதல்ல. மேலும், சுக பிரசவவதற்கு எதுவாக ஆரம்ப சுகாதார மையங்களிலும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளால், சிசேரியன் அறுவை சிகிச்சையால் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலை குறையும் என்று கூறியதுடன், அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை இல்லாமல் 100% சுக‌ப்பிரசவம் மூலம் குழந்தைகள் பிறந்தது என்னும் நிலையை அடையும் வகையில் சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது” என கூறினார்.