ரோம்

த்தாலியில் கொரோனாவால் 100 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

Medical workers in protective suits tend to coronavirus patients at the intensive care unit of a hospital in Wuhan, China.

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.  தற்போது அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.  அதைப் போல் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை இத்தாலியில் அதிகமாக உள்ளது

அமெரிக்காவில் இதுவரை சுமார் 4.36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 15,200 பெருக்கும் மேல் உயிர் இழந்துள்ளனர்.  இத்தாலியில் சுமார் 1.52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 17,700 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இது உலக அளவில் மிக மிக அதிகமாகும்.  இதில் 100 பேர் மருத்துவர்கள் ஆவார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் இத்தாலியில் கொரோனா தாக்கம் கடுமையாக உள்ளது.   இதையொட்டி சென்ற மாதம் ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் பணி புரிந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசு கேட்டுக் கொண்டது.  இவ்வாறு பணி புரிய வந்த மருத்துவர்களில் சிலரும் மரணம் அடைந்துள்ளனர்.