இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவின் தாக்கம் மேலும் மோசமடையக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் எச்சரித்து உள்ளார்.

உலகம் முழுதும், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4414  ஆக உள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறி இருப்பதாவது:

மோசமான பாதிப்புக்குள்ளான பஞ்சாப் மாகாணத்தில் 2,171, சிந்து 1,128, கைபர்-பக்துன்க்வா 560, கில்கிட்பால்டிஸ்தான் 213, பலூசிஸ்தான் 212, இஸ்லாமாபாத் 102 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 28 என நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நோய்த்தொற்று காரணமாக ஒரே நாளில் ஐந்து பேர் உட்பட 63 பேர் இறந்துள்ளனர். மொத்தம் 572 பேர் மீண்டுள்ளனர். 31 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று கூறியிருக்கிறார்.