மும்பை உயர் நீதிமன்றம் பி.பி.சி.ஐ க்கு ஐ.பி.எல். போட்டிகளை மகாராஸ்திராவில் இருந்து இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்க உத்தரவிட்டது. எனினும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள போட்டிக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.
மஹராஸ்திராவில் இருந்து: ஐ.பி.எல். போட்டிகளை இடமாற்றினால் அரசுக்கு 100 கோடி வருமானம் பாதிக்கும் எனத் மாணிக் தாகூர் கூறியுள்ளார்.
நேற்று மஹராஸ்திரா முதல்வர் ஃபட்னாவிஸ் மஹராஸ்திராவில் இருந்து ஐ.பி.எல். போட்டிகளை இடமாற்றுவதற்கு மாநில அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்து இருந்தார்.
ஆனால் அக்கட்சியின் எம்.பி.யும் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகியுமான மாணிக் தாகூர் ஐ.பி.எல். போட்டிகளை இடமாற்றினால் அரசுக்கு 100 கோடி வருமானம் பாதிக்கும் எனக் கூறியுள்ளர். அரசு இந்தப் பணத்தை வறட்சி பாதித்தப் பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கப் பயன்படுத்தலாம் என்றும் யோசனைக் கூறியுள்ளார்.