ஐதராபாத்: அமெரிக்காவிலுள்ள ஒரு கல்லூரியின் கணிப்பொறிகளை சேதப்படுத்திய குற்றத்திற்காக, இந்திய மாணவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், $2,50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது; விஸ்வநாத் அகுதோட்டா என்ற தெலுங்கானா மாணவர், அமெரிக்காவின் நியூயார்க், அல்பானியிலுள்ள புனித ரோஸ் கல்லூரியில், கடந்த 2017ம் ஆண்டு எம்பிஏ பட்டம் பெற்றார்.
கடந்த பிப்ரவரி 14ம் தேதி, கல்லூரியில் அனுமதியின்றி நுழைந்த இவர், ஆன்லைனில் வாங்கிய ‘USB Killer’ சாதனத்தை, USB தரவு தளங்களில் பொருத்தி, 59 Microsoft computer workstatios மற்றும் 7 Apple iMac computer workstations ஆகியவற்றை சேதப்படுத்தினார்.
மேலும், ஏராளமான மானிட்டர்கள் மற்றும் டிஜிட்டல் போடியம்கள் உள்ளிட்டவையும் இவற்றில் அடக்கம்.
இதனடைப்படையில், அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு, தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி