டில்லி:

னைத்து மருத்துவ படிப்புகளிலும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று  மாநிலஅரசுகளுக்கு மத்தியஅரசு நெருக்குதல் கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் எழுதி உள்ளது. அதில், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு முறையை மருத்துவ படிப்பு களுக்கு கடைபிடியுங்கள் என்றும், கல்லூரியின் தரத்தை உயர்த்தாமலேயே மருத்துவ படிப்புக்கான இடங்களை 25% வரை உயர்த்திக் கொள்ளவும்  அனுமதி வழங்கி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலை கருத்தில்கொண்டு, இட ஒதுக்கீடுகள் 50 சதவீதத் துக்கு அதிகமாகக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, காங்கிரஸ் உள்பட பெரும்பாலான  எதிர்கட்சிகளுடன் துணையுடன் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு உடனே குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கிய நிலையில் உடனே அமலுக்கும் வந்தது.

இந்த நிலையில், அனைத்து வகையான மருத்துவ படிப்புகளிலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய வர்களுக்கான 10% இட ஒதுக்கீடு முறையை கடைபிடிக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சில் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக நடுத்தர மக்களின் 10 சதவிகித மருத்துவம் படிப்புக்கான  இடங்கள் பறிபோகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

[youtube-feed feed=1]