டில்லி:
பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகையான கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு செய்ய யுஜிசி வலியுறுத்தி வருகிறது.

பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப் பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, மசோதாவுக்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கிய நிலையில் நடப்பு ஆண்டே அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அனைத்து வகையான படிப்புகளிலும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் களுக்கு 10சதவிகிதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வலியுறுத்தி வருகிறது. அதுபோல,உயர்கல்வி ஆணையமான யுஜிசியும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டு உள்ளது.
[youtube-feed feed=1]