ல்லாஸ், அமெரிக்கா

ந்திர முதல்வர் ஜெகன்மோகனை இந்தி விரோதி என விமர்சித்த பாஜகவினருக்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது

ஆந்திர முதல்வர் ஜெகன்மொகன் ரெட்டி அமெரிக்க நாட்டுக்குத் தனிப்பட்ட பயணமாகச் சென்றுள்ளார். அங்கு டல்லாஸ் நக்ரில் ஒரு நிகழ்வு ஒன்றில் அவர் கலந்துக் கொண்டார்.  அந்த விழாவின் வீடியோவில் ஜெகன் மோகன் ரெட்டி விழா அரங்கில் நுழையும் போது ஒரு குத்து விளக்கு இருப்பதையும் அவர் அதைப் பற்ற வைக்காமல் செல்வதையும் காட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மாநிலங்களவை உறுப்பினர்  இந்த வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன் அவர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு இந்து விரோதி எனவும் அதனால் தான் அவர் குத்து விளக்கைப்  பற்றவைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தெலுங்கானா பாஜகவும் ஜெகன் மோகன் ரெட்டி கோவிலுக்குச் சென்றது வாக்குகள் வாங்க.  அவரும் ரா கா (ராகுல் காந்தி)யைப் போல் வாக்குக்காக இந்து ஆனவர்” என விமர்சித்துள்ளது.

இதற்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அம்பதி ராம்பாபு, “இது தேவையற்ற ஒரு சர்ச்சை ஆகும்.   அமெரிக்காவில் மின்னணு மூலம் மட்டுமே விளக்குகள் எரிகின்றன.   அவை மின்சார விளக்குகள் என்பதால் பற்ற வைப்பது கிடையாது.  விழாவின் பாதுகாப்புக்காக விளக்கு ஏற்றுவது அனைத்து அரங்குகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.   மின்சார விளக்கை ஏற்றாததால் ஜெகன் மோகன் ரெட்டி இந்து விரோதியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் அவர், “தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து பாஜகவுக்கு கட்சி மாறியவர்கள் தான் இது போலச் சர்ச்சையைக் கிளப்புகின்றனர்.   இவர்கள் எல்லாம் சந்திரபாபு நாயுடுவின் அரசு கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைத் தலைநகர் அமைக்க இடித்த போது வாய் திறக்கவில்லை.   ஜெகன் பிறப்பால் கிறித்துவராக இருந்தாலும் இந்து மத விழாக்களிலும் கலந்துக் கொள்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.