பீஜிங்,

ஒரே ஏவுகணையில் 10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணை சோதனையை சீனா வெற்றிகரமாக செய்துள்ளது.

 

10 அணுகுண்டுகளை ஒரே ஏவுகணையில் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வகையில் நீண்ட தூர ஏவுகணை சோதனையை சீனா நடத்தியது. இது உலக நாடுகளிடையே வியப்பதையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

உலகிலேயே அதிகளவு மக்கள் தொகையைக் கொண்ட நாடு சீனா. அமெரிக்வுகாக்கு போட்டியாக தனது வல்லமையை நிரூபித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் அமெரிக்காவுக்கு இணையாக பலம்பொருந்திய நாடாக சீனா உருவெடுத்துள்ளது. 10 அணுகுண்டுகளுடன் நீண்ட தூரத்துக்கு பறந்து சென்று எதிரியின் இலக்குகளை துல்லியமாக தாக்குதல் ஆற்றல் வாய்ந்த ஏவுகணையை சில நாட்களுக்கு முன் சோதனை செய்துள்ள தகவல் தற்போதுதான் வெளியாகி உள்ளது.

இந்த ஏவுகணை, மத்திய சீனாவில் உள்ள தையுவான் விண்வெளி ஏவும் மையத்தில் இருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.

புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்று அதிரடி நடவடிக்கைகள் எடுத்துவரும் வேளையில் சீனாவின் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.