சென்னை: மாநிலம் முழுவதும் ₨115 கோடி மதிப்பீட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 424 கோடி ரூபாய் மதிப்பில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான அரசாணையை 2022ம் அண்டு ஜனவரி 26ந்தேதி வெளியிட்டிருந்தது. அதன்படி, ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருமங்கலம், திண்டிவனத்தில் இந்த புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது 10 புதிய 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகள் என 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, திரூப்பூரில் ரூ.26 கோடி மற்றும் ஓசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.