பார்வதி நாயர் வீட்டில் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோயுள்ளது.
மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை பார்வதி நாயர்.
2015 ம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண்விஜய்-க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர்.
ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் இவரது வீட்டில் இருந்து 6 லட்சம் மற்றும் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு கைகடிகாரங்கள் மற்றும் 50000 ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து தனது வீட்டில் வேலை பார்த்தவர்கள் மீது சந்தேகப்படுவதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பார்வதி நாயர் புகார் அளித்துள்ளார்.
பார்வதி நாயரின் புகாரை ஏற்று காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடைசியாக ஹிந்தி-யில் வெளியான 83 படத்தில் நடித்திருந்த பார்வதி நாயர் தற்போது ஆலம்பனா என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.