டில்லி
மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவில் காணப்படும் 10 முக்கிய விவரங்கள் குறித்த செய்தி இதோ
நேற்று மாநிலங்களவையில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா 2019 ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைத்துள்ளன. இந்த புதிய சட்டத்தின் மூலம் போக்குவரத்து துறையில் உள்ள ஊழல்கள் குறைக்கப்பட்டு சாலை பாதுகாப்பு முன்னேற்றம் மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை மேம்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த மசோதாவில் காணப்படும் 10 முக்கிய விவரங்கள் இதோ
1. சாலை பாதுகாப்பு : போக்குவரத்து விதி மீறல்களுக்கு இந்த மசோதாவில் கடும் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. சிறு வயதினர் வாகனம் செலுத்துவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, உரிமம் இன்றி ஓட்டுவது, அபாயகரமாக ஓட்டுவது, அதிக வேகம் மற்றும் அதிகச் சுமை ஆகியவைகளுக்கான அபராதம் எக்கச்சக்கமாக அதிகரிக்க உள்ளது. ஹெல்மெட் இல்லாமை மற்றும் சிக்னல்களை மதிக்காமல் செய்வதற்கும் கடும் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அபராதத் தொகை ஒவ்வொரு வருடமும் 10% அதிகரிக்க உள்ளது
2. வாகன தகுதி : வாகனம் சாலைகளில் செல்லும் தகுதிப் பரிசோதனை கண்டிப்பாக்கப்பட உள்ளது., அத்துடன் பாதுகாப்பு அற்ற அல்லது சுற்றுச்சூழல் பாதிப்பை உண்டாக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் அந்த வாகன கட்டமைப்பாளர்களுக்கும் கடும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
3. வாகனங்கள் திரும்ப பெறுதல் : வாகனங்களின் நிலையால் சுற்றுச்சூழல், ஓட்டுனர் மற்ற சாலை பயணிகளுக்கு துன்பம் நேரிட்டால் அந்த வாகன உரிமத்தை ரத்து செய்து திரும்ப பெற அரசுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
4. குற்றங்களும் அபராதங்களும் : இந்த மசோதா பல குற்றங்களுக்கு அபராதத் தொகையை அதிகரித்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கான அபராதம் ரூ.2000 லிருந்து ரூ.10000 ஆக்கப்பட்டுள்ளது. தரமற்ற முறையில் வாகனம் உற்பத்தி செய்வோருக்கு ரூ. 100 கோடி வரை அபராதம் அல்லது ஒரு வருட சிறை தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்பட உள்ளது. தரமான சாலை அமைக்காத ஒப்பந்த தாரர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை வழஙப்பட உள்ளது. அபராதத் தொகை ஒவ்வொரு ஆண்டும் 10% உயர்த்தாபட உள்ளது.
5. நற்செயல் புரிவோருக்கு பாதுகாப்பு : விபத்தில் காயமடைந்தோருக்கு உடனடியாக உதவும் குடிமக்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு காவல்துறை எவ்வித தொந்தரவும் அளிக்கக் கூடாது என மசோதாவில் உள்ளது
6. ஆபத்து வேளையில் இலவச சிகிச்சை : விபத்தில் சிக்கியவரக்ளுக்கு அபாய நேரத்தில் இலவச சிக்கிச்சை பெற திட்டங்கள் அமைக்கப்பட உள்ளன.
7. மூன்றா,ம் நபர் காப்பீடு : விபத்தில் சிக்கியவர்களுக்கான காப்பிட்டுத் தொகை ரூ. 50000 லிருந்து ரூ.500000 ஆக 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக பிரிமியம் உயர்த்தப்பட மாட்டாது எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
8. ஆன்லைன் மூலம் ஓட்டுனர் உரிமம் : கற்போர் ஓட்டுனர் உரிமத்தை ஆன்லைன் மூலம் பெற வழிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் போலி உரிமம் பெறாமல் இருக்க ஆதார் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழில் முறை ஓட்டுனர் உரிம காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகள் ஆக்கப்பட்டுள்ளன. அனைத்து உரிமத்தை புதுப்பிக்கவும் ஆதார் அவசியமாகும்.
9. வாகனப் பதிவு விதிகள் : புதிய வாகனப்பதிவை முன்னேற்ற முகவர்கள் மூலம் வாகனம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தற்காலிக பதிவுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
10. வாடகைக் கார் முகமை : வாடகைக்கார் ஓட்டுனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்க டிஜிடல் முகமை மற்றும் அதற்கான விதிகள் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது அத்தகைய முகமைகான எவ்வித விதிகளும் இல்லை.