சென்னை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்புக்குப் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்டோருக்கான 10% இட ஒதுக்கீடு முறை அமலானது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தோருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டத்துக்குப் பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசு இந்த ஒதுக்கீட்டு முறை மாநிலத்தில் பின்பற்றப்பட மாட்டாது எனவும் ஏற்கனவே உள்ள 69% இட ஒதுக்கீட்டு முறை மட்டுமே பின்பற்றப்படும் என அறிவித்துள்ளது. ஆயினும் தமிழகத்தில் ஒரு சில பல்கலைக்கழகத்தில் 10% இட ஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டுள்ளது/
இந்நிலையில் தமிழக அரசால் நடத்தப்படும் அண்ணா பல்கலைக்கழகத்திலும் அந்த ஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் பயோடெக்னாலஜி பிரிவில் பம்ம்ட்டமேற்படிப் மற்றும் கம்ப்யூடேஷனல் பயாலஜி பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. கடந்தஆண்டு வரை இந்த இரு படிப்புக்களுக்கும் ஜவகர்மேல் நேரு பலகலைக்கழகம் மற்றும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.
இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் இந்த மாணவர் சேக்கையை நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே தமிழக அரசால் நடத்தப்படும் அண்ணா பல்கலைக்கழகம் தமிழக ரசின் 69% இட ஒதுக்கீட்டை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஆனால் மத்திய அரசின் படிப்புக்கள் என்பதால் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்த வேண்டி உள்ளது. எனவே இந்த ஆண்டு இந்த படிப்புக்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறாது எனப் பல்கலைக்கழகம் அறிவித்தது.
இதை எதிர்த்து சித்ரா என்னும் மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய அரசின் இட ஒதுக்கீடு விதிப்படி மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்த உத்தரவிட்டது. அதன்படி மாணவர் சேர்க்கை நடந்து மார்ச் 5 ஆம் தேதி பட்டியல் வெளியானது. இதில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழகம் ஆகிய 4 பலகலைக்கழகங்களிலும் 10% இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இது மாநிலத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் தமிழக அரசின் முக்கிய பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்திலும் 10% இட ஒதுக்கீடு அமலாகி உள்ளது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.