சிகார்
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பேருந்து விபத்தில்ல் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று மாலை ராஜஸ்தானின் சலாசரில் இருந்து லஷ்மங்கர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது அந்த பேருந்து சிகார் மாவட்டத்தில் சாலையில் திருப்பும் போது மேம்பாலத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் 10 பேர் உயிரிழந்து 36க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். விபத்து பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லஷ்மங்கர் மற்றும் சிகார் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி புவன் பூஷன் யாதவ் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் இந்த விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
[youtube-feed feed=1]