டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணியுடன் முடிவடைந்த கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,016 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,63,968 ஆக உள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,187 ஆகக் குறைந்துள்ளது.
நேற்று மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,30,514 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,20,267ஆக பதிவாகியுள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,76,55,203 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 1,32,767 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]