10 நாட்கள் ஆன குழந்தையை ஓ.எல்.எக்ஸ். இல் விற்பனை

Must read

பியாமா அபரேசிடாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பிறந்து 10 நாட்கள் ஆன அந்த குழந்தையை விற்பதற்கு ஓ.எல்.எக்ஸ். விளம்பர பக்கத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார் அவள் கணவர் கோஸ்டா. இந்த கொடுமை தென்கிழக்கு பிரேசிலில் உள்ள பேலோ ஹரிசான்டி நகரில் நடைபெற்றது. கோஸ்டா 3 குழந்தைகளுக்கு தந்தையாவார்.

article-2507287-1969938300000578-736_634x451
ஓ.எல்.எக்ஸ். இல் குழந்தையின் படத்தை போட்டு அதில், ‘எனது 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்கிறேன். குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளது’ என கூறி இருந்தார்.
man2_2774938a
இது ஒரு சிறைந்த முதலீடு என்றும் விலை குறித்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். இதை பார்த்த பலர் போலீசாருக்கு பலர் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அவரை விசாரித்தனர் முதலில் மறுத்த கோஸ்டா பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை வேடிக்கையாக செய்ததாக கூறி சமாளித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
‘இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்ன காரணத்திற்காக அவர் இதை செய்தார் என்று எனக்கு தெரியவில்லை’ என குழந்தையின் தாயார் கூறினார்.

More articles

Latest article