டெல்லி: அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு செய்வதற்காக தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் கடந்த 24 நாளில் 1 கோடி அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனர். இந்த இணைதளத்துக்கு தொழிலாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அமைப்புசாரா தொழிலாளா்கள் மத்தியஅரசின் சலுகைகளை பெற இணையதளத்தில் பதிவு செய்யும் வகையில், இ-ஷ்ரம் (eshram.gov.in) என்ற இணையதளம் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த இணையதளத்துக்கு தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இணையதளம் தொடங்கிய 24 நாள்களில் 1,03,12,095 பர் பதிவு செய்துள்ளனா். இவா்களில் 43 சதவீத பயனாளிகள் பெண்கள், 57 சதவீதம் பேர் ஆண்கள்.
சமீபத்திய தரவுகளின்படி பிகாா், ஒடிஸா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சோந்த அமைப்புசாரா தொழிலாளா்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளனா்.