சென்னை:  இலங்கை மக்களுக்கு தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.40 கோடி நிதியுதவியை டிஜிபி சைலேந்திரபாபு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு இந்திய அரசு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. தமிழக அரசும் தனது பங்குக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வருகிறது. தமிழகஅரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் உள்பட கட்சிகள் சார்பில் மற்றும் தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை மக்களுக்கு உதவும் வகையில்,  தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.40 கோடி நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார். தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.34 கோடி, இந்திய காவல் பணி சங்கம் சார்பில் ரூ.6.63 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.