சென்னை:

கொரியர் மூலம் அமெரிக்காவுக்கு ரூ. 1.37 லட்சம் போதை மாத்திரைகள் கடத்த முயன்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு கொரியா் மூலம் ஒரு கும்பல் தடை செய்யப்பட்ட போதை மாத்திரை களை கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையில் உள்ள கொரியா் நிறுவனங்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் சந்தேகத்துக்குரிய ஒரு கொரியா் நிறுவனத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி யாக சோதனை செய்தனா். இதில் அந்த நிறுவனத்தில் மூலிகை வகை மாத்திரைகள் என பெயரிடப்பட்டு சரக்கு விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த பாா்சல்களை சோதனை யிட்டனா்.

திருச்சியைச் சேர்ந்த ஒரு கூரியர் நிறுவனத்தால் தடைசெய்யப்பட்ட சரக்குகளில் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ள தாக வட்டாரங்கள் தெரிவித்தன/. இதையடுத்து அந்த பார்சல்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) கைப்பற்றியது,  இந்த பார்சலில் பல்வேறு மாத்திரைகள் இருத்து தெரிய வந்தது. தடை செய்யப்பட்ட இந்த மாத்திரைகள் அனைத்தும் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து பெறப்பட்டதாக  கூறப்படுகிறது.

இந்த போதை மாத்திரைகள் சென்னையில் இருந்து திருச்சி அனுப்பப்பட்டு, அங்கிருந்து கொரியர் மூலம் பெங்களூரு அனுப்பப்பட்டு, அங்கிருந்து விமானம் வழியாக வெளிநாடுகளில் கடத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கொரியல் பார்சல்களில்  மூலிகை வகை மாத்திரைகள் இல்லை என்பதும், அதில் தடை செய்யப்பட்ட  மாத்திரைகளான  அல்பிரஸோலம், டயஸெபம், ஹைட்ரோகோடோன், நைட்ராஜெபம், ஃபென்டர்மின், சோல்பிடெம் மற்றும் ஆக்ஸிகோடோன் (அனைத்து மனோவியல் பொருட்கள்) தடாலாஃபில் மற்றும் சில்டெனாபில் (வயக்ரா மற்றும் சியாலிஸ்) மாத்திரைகளும், அத்துடன்  காமத்தை தூண்ட கூடிய இரு வகை மாத்திரைகளுமாக சுமாா் ரூ. 1.37 லட்சம் மாத்திரைகள் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மாத்திரைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கொரியா் நிறுவனத்தின் அதிகாரி, அந்த பாா்சலை அனுப்ப முயன்ற சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன், அவரது கூட்டாளி என 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கும்பல் ஏற்கெனவே இதேபோல போதை மாத்திரைகளை மூலிகை பொருள்கள் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்தக் கும்பல் இணையதளம் மூலம் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.