பாபநாசம்:
பாபநாசம் அருகே பல்லவராயன்பேட்டையில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.10 லட்சம் பறிமுதல் செய்யபட்டது.

தமிழகத்திற்கு ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் அமலுக்கு வந்தது.

இதையொட்டி கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாபநாசம் அருகே பல்லவராயன்பேட்டையில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 1.10 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேற்று பிப்ரவரி 28ஆம் தேதி கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை பாறைமேடு பகுதியில் உள்ள ஒருவர் வீட்டிலும், தனியார் தங்கும் விடுதியிலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.