சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,92,788 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை  2,18,198 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநிலஅரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில்,  சென்னை உள்ள  15 மண்டலங்களில்  கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியாகி உள்ளது.

சென்னையில் 2,18,198 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,11,061 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். அதே வேளையில், இதுவரை 3885 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 3,252 பேர் மட்டுமே உள்ளனர். நேற்று மட்டும் 10,132 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்:

கோடம்பாக்கம் – 356 பேர்

அண்ணா நகர் – 386 பேர்

தேனாம்பேட்டை – 276 பேர்

தண்டையார்பேட்டை – 169 பேர்

ராயபுரம் – 211 பேர்

அடையாறு- 333 பேர்

திரு.வி.க. நகர்- 330 பேர்

வளசரவாக்கம்- 193 பேர்

அம்பத்தூர்- 280 பேர்

திருவொற்றியூர்- 80 பேர்

மாதவரம்- 136 பேர்

ஆலந்தூர்- 174 பேர்

பெருங்குடி- 132 பேர்

சோழிங்கநல்லூர்- 74 பேர்

மணலியில் – 49 பேர்.