டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 72 ஆயிரத்தை கடந்துள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பில் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், நேற்று 75,002 பேருக்கு புத்தாக தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.
தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 42லட்சத்து 77ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில், 74,123 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை, குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33லட்சத்துக்கு 21ஆயிரத்து 420 பேர் பேர் குணமடைந்து உள்ளனர்.
நேற்று ஒரேநாளில் 1129 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கொரோனா வால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 72,816 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் 8,82,751 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.