சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநில அரசு ஏற்கனபே பகுதி நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், பாதிப்பு உயர்ந்துகொண்டே வருகிறது.
தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேருக்கு புதியதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக தலைநகர் சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 13,51,362 ஆக உயர்நதுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 23,110 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 11,96,549 பேர்.,
தற்போதைய நிலையில், 1,39,401 பேர் சிகிச்சையில் உள்ளது. (மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமை)
இன்று மட்டும் 241 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,412 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஆந்திரா -7, மேற்குவங்கம் 2, ஜார்கண்ட் 1, கர்நாடக 1, பீகார் 1, கேரளா 1 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இன்று ஒரே நாளில் 1,55,998 பேருக்கு ஆர்.டி.பிசிஆர் சோதனை செய்யப்பட்டு உள்ளது.