டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,431 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக உள்ளதுடன், சிகிச்சை பலன்ன்றி  318 உயிரிழந்துள்ளனர்.  தொற்றில் இருந்து 24,602 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை (8 மணி வரையிலான நிலவரம்) வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக மேலும் 22,431 பேர் கொரோனவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,38,94,312 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி மேலும்  318 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம், நாட்டின்  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,49,856 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 24,602 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,32,00,258 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட 2,44,198 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் மேலும், 3,09,525 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 92,63,68,608 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.