டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன் 22 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள தகவலில், நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 3,805 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,98,743 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் மேலும் 22 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,024 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக உள்ளது/
நேற்று மட்டும் தொற்றில் இருந்து 3,168 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,54,416 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20,303 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,49,063 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,90,00,94,982 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]