சென்னை: தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 179 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில வாரங்களாக தொற்றுபாதிப்பில் 2வது இடத்தில் இருந்து வந்த சென்னை, தற்போது மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நேற்று புதிதாக 1,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 71 ஆயிரத்து 411ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 682 ஆக அதிகரித் துள்ளது. நேற்று, 1548 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 18 ஆயிரத்து 980 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 16 ஆயிரத்து 749 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று மேலும் 179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 5,50,759 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி   2 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,497 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே வேளையில் நேற்று 192 பேர் குணம் அடைந்து, இதுவரை  மொத்தம் 5,40,362 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போதைய நிலையில்,  சென்னையில் 1,900 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு:

 

 

[youtube-feed feed=1]