சென்னை:  தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னை யில், தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இன்று ஒரேநாளில் தமிழகம் முபவதும் 5,783பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதனால்,  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,63,480-ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 7,836 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 30 பேரும், அரசு மருத்துவமனையில் 58 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 5,820 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 4 லட்சத்து 04ஆயிரத்து 186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 87.20 % குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி 51 ஆயிரத்து 458 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,449 பேர் ஆண்கள், 2,372 பேர் பெண்கள். தற்போது வரை 2 லட்சத்து 79 ஆயிரத்து 704 ஆண்கள், 1 லட்சத்து 83 ஆயிரத்து 747 பேர் பெண்கள், 29 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5,773 பேர் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 10 என 5,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்த கோவிட்-19 பரிசோதனை நிலையங்கள் – 161 (64 அரசு + 97 தனியார்)

இன்று ஒரே நாளில் 84034 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 51,26,231 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

சென்னையில் 955 பேர்,

அரியலூர் 37,

செங்கல்பட்டு 361,

கோவை 538,

கடலூர் 388, த

ருமபுரி 24,

திண்டுக்கல் 118,

ஈரோடு 118,

கள்ளக்குறிச்சி 184,

காஞ்சிபுரம் 196,

கன்னியாகுமரி 116,

கரூர் 43,

கிருஷ்ணகிரி 86,

மதுரை 111,

நாகப்பட்டிணம் 136,

நாமக்கல் 96,

நீலகிரி 48,

பெரம்பலூர் 17,

புதுக்கோட்டை 100,

ராமநாதபுரம் 42,

ராணிப்பேட்டை 135,

சேலம் 122,

சிவகங்கை 33,

தென்காசி 53,

தஞ்சாவூர் 150,

தேனி 84,

திருப்பத்தூர் 44,

திருவள்ளூர் 246,

திருவண்ணாமலை 272,

திருவாரூர் 123,

தூத்துக்குடி 50,

நெல்லை 132,

திருப்பூர் 153,

திருச்சி 111,

வேலூர் 157,

விழுப்புரம் 130,

விருதுநகர் 67 என

இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது.