சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 1438 பேரில் சென்னையை சேர்ந்தவர்கள்  1,116 பேர். இதன் காரணமாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,826 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அங்கு, பாதித்தோரின் எண்ணிக்கை 3,552 ஆக அதிகரித்துள்ளது . 15 மண்டலங்களில் 4 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2000-ஐ தாண்டியுள்ளது.

கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,202 பேரும், திரு.வி.க. நகரில் 19,58 பேரும், தேனாம்பேட்டையில் 2,245 பேரும், தண்டையார்பேட்டையில் 2,470 பேரும், அண்ணா நகரில் 1,784 பேரும், அடையாறில் 1094 பேரும் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்தில் 996 பேரும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை 19,826 ஆக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19826. தற்போது நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 9283 பேர் இது 47.3 சதவிகிதம்.   இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 10156 இது 51.0 சதவிகிதம், இறந்தவர்கள் எண்ணிக்கை 178 இது 0.9 சதவிகிதம் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.