சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாய் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,872  ஆக உயர்ந்துள்ளது.  நேற்று பாதிக்கப்பட்ட 1286 பேரில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,012 பேர். இதனால்  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 17,597 ஆக உயர்ந்தது.

இன்று 11 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 14,310 ஆக அதிகரித்தது.

சென்னையின் 15 மண்டலங்களில் 7 மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்துக்கும் மேலான நிலையில்,  ராயபுரத்தில்  பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், தண் திரு.வி.க.நகர்,  அண்ணாநகர்,  அடையாறு மண்டலங்கள் ஆயிரத்தை கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.

சென்னையில் மண்டலம் வாரியாகம் பாதிப்பு விவரம்:

மண்டலம் -01 திருவொற்றியூர் – 610

மண்டலம் -02 மணலி  – 246

மண்டலம் -03 மாதவரம் 431

மண்டலம் -04 தண்டையார்பேட்டை 2093

மண்டலம் -05 இராயபுரம் 3224

மண்டலம் -06 திரு.வி.க.நகர் 1798

மண்டலம் -07 அம்பத்தூர் 651

மண்டலம் -08 அண்ணாநகர் 1525

மண்டலம் -09 தேனாம்பேட்டை 2014

மண்டலம் -10 கோடம்பாக்கம் 2029

மண்டலம் -11 வளசரவாக்கம் 939

மண்டலம் -12 ஆலந்தூர் 261

மண்டலம் -13 அடையாறு 1007

மண்டலம் -14 பெருங்குடி 301

மண்டலம் -15 சோழிங்கநல்லூர் 306

மொத்தம் : 163

 

 

 

 

 

 

 

கொரோனா நுண்கிருமி தொற்று உள்ளவர்களை கவனித்து கொள்ளும்பொழுது, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.