ஜெனிவா:  உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2கோடியே 67லட்சத்தை தாண்டி உள்ளது. தினசரி அதிகரித்து வரும் பாதிப்புகள் உலக நாடுகளை சொல்லோனா துயரத்துக்கு ஆளாக்கி வருகிறது. இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், உலக பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டு உள்ளது.

இன்றுகாலை 7மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2 கோடியே 67லட்சத்தை தாண்டியுள்ளது. ஒரேநாளில் உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 2,67,73,552 ஆக உயர்ந்துள்ளது.

 இதுவரை கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1,88,83,399 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,78,083 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில்,  முதலிடத்தில்அமெரிக்கா தொடர்ந்து இருந்து வருகிறது.  அங்கு  தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,389,057ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  பலியானோர் எண்ணிக்கை 192,111 ஆக உள்ளது.  இதுவரை 3,635,854  பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில், 2,561,092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு உள்ளது. அங்கு இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,091,801 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 125,584 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதுவரை 3,278,243 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில்,  687,974 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3வது இடத்தில் இந்தியா உள்ளது. ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது.. இந்தியாவில், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,020,239 ஆக  உள்ளது.  இதுவரை 69,635 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 3,104,512பேர் குணமடைந்து உள்ளனர். 846,092 பேர் சிகிச்சையில் உள்ளது.

4வது இடத்தில் ரஷியா தொடர்கிறது. அங்கு 1,015,105 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 17,649 பேர் உயிரிழந்துள்ளனர்.

5வது இடத்தில் பெரு நாடு உள்ளது. இங்கு  670,145  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை  29,40பேர் உயிரிழந்துள்ளனர்.