சென்னை: தமிழகத்தில் புதிதாக 1949 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 189 பேர் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்.
தமிழக சுகாதாரத்துறை நேற்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாடு முழுவதும் புதிதாக 1949 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், அதிகபட்சமாக கோவையில் 226 பேரும், சென்னையில் 189 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 154 பேரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் நேற்று 1,949 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆனதுடன், இதுவரை மொத்தம் 25,67,401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் 38 பேர் உயிர் இழந்து இதுவரை 34,197 பேர் உயிர் இழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 2011 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 25,13,087 பேர் குணம் அடைந்துள்ளனர். சிகிச்சையிலும் வீட்டுத் தனிமையிலும் உள்ள கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 117 ஆகும்.
ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 635 மாதிரிகளைச் சோதனை செய்ததில் 1949 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்றுப் பாதிப்பு
சென்னையில் நேற்று 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,38,908 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயரிழந்துள்ளதுடன், இதுவரை 8,323 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 103 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 5,28,745 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,840 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: