சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்திலேயே தொற்று பாதிப்பில் முதலிடத்தில் தலைநகர் சென்னை இருந்து வருகிறது. இருந்தாலும் சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்து வருவது சோதனை முடிவுகளில் தெரிய வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4லட்சத்து 50ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில், 968 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் காரணமாக, இதுவரை 1,38,724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இதுவரை 1,23,851 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,814 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலையில், சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,059 ஆக உள்ளது.
சென்னையில் 61.27% ஆண்களும் 38.73% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேறறு(03.09.2020) மட்டும், 11,325 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
சென்னையில் மண்டலம் வாரியாக நோய் குணமடைந்தவர்கள் பட்டியல்:
1 திருவொற்றியூர் 4,059
2 மணலி 1,998
3 மாதவரம் 4,378
4 தண்டையார்பேட்டை 10,821
5 ராயபுரம் 12,496
6 திருவிக நகர் 9,402
7 அம்பத்தூர் 8,554
8 அண்ணா நகர் 14,017
9 தேனாம்பேட்டை 12,166
10 கோடம்பாக்கம் 14,060
11 வளசரவாக்கம் 7,737
12 ஆலந்தூர் 4,371
13 அடையாறு 9,416
14 பெருங்குடி 3,954
15 சோழிங்கநல்லூர் 3,329
16 இதர மாவட்டம் 3,093.
மண்டலம் வாரியாக சிகிச்சை பெறுவோர் பட்டியல்:
1 திருவொற்றியூர் 316
2 மணலி 157
3 மாதவரம் 508
4 தண்டையார்பேட்டை 717
5 ராயபுரம் 944
6 திருவிக நகர் 915
7 அம்பத்தூர் 965
8 அண்ணா நகர் 1,418
9 தேனாம்பேட்டை 875
10 கோடம்பாக்கம் 1,391
11 வளசரவாக்கம் 887
12 ஆலந்தூர் 726
13 அடையாறு 1,055
14 பெருங்குடி 528
15 சோழிங்கநல்லூர் 507
16 இதர மாவட்டம் 150 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.