ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை புரட்டிப்போட்டு, பொருளாதாரத்தையே முடக்கி உள்ளது. இன்று காலை 7மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2 கோடியே 64லட்சத்தை தாண்டியுள்ளது.
தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 2,64,58,208 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றுபாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1,86,51,778 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,72,508 ஆக அதிகரித்து உள்ளது.
உலக நாடுகளில் , கொரோனா பாதிப்பில் முதலிடத்தில்அமெரிக்கா இருந்து வருகிறது. அங்கு தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,335,244 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 191,058 ஆக உள்ளது. இதுவரை 3,575,096 பேர் குணமடைந்து உள்ளனர்.
2வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு தொடர்ந்து வருகிறது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,046,150 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 124,729 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தும் உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை3,247,610 பேர் குணமடைந்து உள்ளனர்
3வது இடத்தில் இந்தியா உள்ளது. ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது.. இந்தியாவில், இதுவரை கொரோனா பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 3,933,124 ஆக உள்ளது. இதுவரை 68,569 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2,967,396 பேர் குணமடைந்து உள்ளனர்.