டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,33,124 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரியும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படு கின்றன. 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 30,34,887 பேர் மீண்டுள்ளனர்.
இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு இந்தியாவில் 68,.569 பேர் மரணமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் 8,29,068 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக அளவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.